உள்ளூர் செய்திகள்

அம்மனின் பூஞ்சப்பரபவனி நடந்த போது எடுத்த படம்.

ஆறுமுகநேரியில் தசரா திருவிழா - மாரியம்மன் கோவிலில் சப்பர பவனி

Published On 2023-10-25 06:59 GMT   |   Update On 2023-10-25 06:59 GMT
  • விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
  • நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலில் தசரா திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினசரி காலையிலும், மாலையிலும் வழக்கமான பூஜையும், இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. ஒவ்வொரு நாளும் கிருஷ்ணராகவும், சுப்பிரமணியராகவும், மகாலட்சுமியாகவும், பராசக்தியாகவும், அன்னபூரணியாகவும், சரஸ்வதியாகவும் அம்பாளின் காட்சியருளல் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு பூஜையை தொடர்ந்து அம்மனின் பூஞ்சப்பரபவனி தொடங்கியது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற சப்பரபவனி இன்று காலையில் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கப்பாண்டியன் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News