உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை, அன்னிய மதுபானங்கள் கடத்தலை தடுக்க போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.

திண்டிவனம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க விடிய விடிய வாகன சோதனை

Published On 2022-07-21 07:36 GMT   |   Update On 2022-07-21 07:37 GMT
  • திண்டிவனம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
  • விதிமீறல் களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

விழுப்புரம்:

திண்டிவனம் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, அந்நிய மதுபானகள்,போதை மாத்திரைகள், ஆகியவை விற்பதாக வெளியான தகவலின் பெயரில் விற்பனையை தடுக்கும் பொருட்டு திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷக் குப்தா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பெயரில் நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, காவர்கள், அன்பு வேல், வரதராஜ், சுந்தர். மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். விதிமீறல் களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News