எடப்பாடி பழனிசாமி நாளை வருகை : சங்கரன்கோவிலில் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கிய அ.தி.மு.க.வினர்
- கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- அதை முன்னிட்டு சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சங்கரன்கோவில்:
அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன் பேரில் நாளை (புதன்கிழமை) மாலை சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதை முன்னிட்டு சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று சங்கரன்கோவில் இந்திரா நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று பொது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சண்முகையா, மாவட்ட விவசாய அணி செயலாளர் பரமகுருநாதன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், வேல்முருகன், செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், கந்தசாமி, நகர பேரவை செயலாளர் சவுந்தர், மாநில பேச்சாளர்கள் ராமசுப்ரமணியன், லட்சுமணன், கவுன்சிலர் சங்கரசுப்ரமணியன், மாணவரணி செயலாளர் மாரியப்பன், மோகன், பாசறை நிவாஸ், தங்கம், குட்டி மாரியப்பன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.