உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்

Published On 2023-01-17 10:14 GMT   |   Update On 2023-01-17 10:14 GMT
  • 50 லட்சம் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.
  • போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது

பல்லடம் :

பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி, உடுமலை, மங்கலம், உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.இந்த நிலையில் பல்லடம் நகரில், விபத்துக்களை தவிர்க்கவும், நகரத்திற்கு அழகு சேர்க்கும் விதமாகவும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், சுமார் 50 லட்சம் மதிப்பில், சாலை மைய தடுப்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதனால் பல்லடம் நகரமே ஜொலித்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக, சாலை தடுப்பில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் நால்ரோடு சந்திப்பில் உள்ள, உயர் மின் கோபுர விளக்குகளும் எரிவதில்லை.  இதனால், அந்த இடமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துக்கள் நேரும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரியச் செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.     

Tags:    

Similar News