உள்ளூர் செய்திகள்
வேலைக்கு சேர்ந்த 5 மாதத்தில் 45 பவுன் நகையுடன் ஊழியர் ஓட்டம்
- நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
- 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார்.
போரூர்:
சென்னை அசோக் நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது. இவர் தனது வீட்டின் கீழே பழைய நகை மற்றும் செல்போன் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாமுனார் மரைக்காயர் என்பவர் கடந்த 5 மாதங்களாக தங்கி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முஸ்தாக் அகமது தன்னிடம் இருந்த 45 பவுன் நகை மற்றும் 10 ஐ போன்களை மரைக்காயரிடம் கொடுத்து அதனை பர்மா பஜாரில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் மரைக்காயர் திரும்பி வரவில்லை. மேலும் அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் நகை மற்றும் செல்போன்களை சுருட்டிக் கொண்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.