விழுப்புரத்தில் 25-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம்
- விழுப்புரத்தில் 25-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.08.2022 வியாழக்கிழமை அன்று சிறிய அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார்துறை வேலைவாய்ப்பு நிறுவனம் கலந்து கொண்டு 3,000-ற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநர்கள். வேலைநாடுநர்களின் வயது வரம்பு 18 முதல் 20 -க்குள் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத் தைச் சார்ந்த மேற்குறிப்பி ட்ட தகுதிகளையுடைய பெண் வேலைநாடுநர்கள் 25.08.2022 அன்று காலை 9.00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.
முகாமில் தேர்வு செய்யப்படும் வேலைநாடு நர்களுக்கு 3 மாதகால பயிற்சி, மாத சம்பளமாக ரூ.15,000/-, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இந்நிறுவனத்தால் செய்து தரப்படும். இதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது. இம்முகாமில் பணியாணை பெறும் எந்தவொரு மனுதாரருக்கும் அவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு இரத்து செய்யப் படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் வேலைநாடு நர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்து உள்ளார்.