லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மன்ற கூட்டம்
- கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில் பொறியியல் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
- பி.எஸ்.என்.எல். அதிகாரி சங்கரநாராயணன் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மன்றத்தின் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்து பேசினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில் பொறியியல் மன்றக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். 3-ம் ஆண்டு மாணவி அபிஷா செல்லம் வரவேற்று பேசினார்.
பொறியியல்மன்ற செயல்பாடுகள்
கூட்டத்திற்கு பயிலக முன்னாள் மாணவரும், சங்கரன்கோவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இளநிலை தொலைதொடர்பு அதிகாரியுமான சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மன்றத்தின் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்து பேசினார்.
மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தினரால் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறுகியகால தொழிற்பயிற்சி மற்றும் அந்நிறுவன தொழில்நுட்ப செயல்பாடுகளை பார்வையிடல் போன்றவைகளுக்கான வழிமுறைகளை எடுத்து கூறினார்.
முன்னதாக இ.சி.இ. துறையின் 3-ம் ஆண்டு மாணவர் கணேஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முடிவில் 2-ம் ஆண்டு மாணவர் முகுந்தன் நன்றி கூறினார். 3-ம் ஆண்டு மாணவர் ஜெபிமோசஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் ஆலோசனைப்படி, முதல்வர் தலைமையில் துறைதலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.