நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
- அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நாமக்கல்:
தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.