உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலைத் திருவிழாவில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

Published On 2023-10-30 10:10 GMT   |   Update On 2023-10-30 10:10 GMT
  • மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது
  • கலை திருவிழாவில் 9 வகைகளாக 64 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்

சென்னிமலை,

மாணவர்களின் கலைத்திறனை வெளிக் கொணரும் வகையில் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவிலும், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கலைத் திருவிழா போட்டிகள் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகு ப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மற்றும் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கடந்த 2 நாட்களாக 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது.

போட்டியினை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) ஜோதி சந்திரா தலை மையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.

கலை திருவிழாவில் 9 வகைகளாக 64 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 2,866 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

விழா ஏற்பாடுகளை திப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமையில் சென்னிமலை வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் கோபிநாதன், வட்டார கல்வி அலுவலாகள் ராஜேந்திரன், செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News