கார், மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
- சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது.
- போலீசார் சோதனை நடத்தியதில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கவுந்தப்பாடி-காஞ்சிக்கோவில் பிரிவு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நின்றது. அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி மாவட்டம் உறையூர் முஸ்லீம் வீதியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பதும், பெருந்துறை பெத்தாம்பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் (33) என்பதும் தெரியவந்தது.
இவர்களின் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை நடத்தியதில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்களை விற்ப னைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அப்துல் ரகுமான், தர்மராஜ் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சா பொட்ட லங்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை யில் ஈடுபட்டிருந்த மரப்பா லம் ஆலமரத்து வீதியை சேர்ந்த தினேஷ் என்ற கொசு தினேஷ் (24) என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.