- சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு திருநகர் காலனி ஜெயகோபால் வீதியில் பழைய டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்றதாக கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சந்திரசேகரன் (30), அதேபகுதியை சேர்ந்த சக்திவேல் (37) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 138 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3,690 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மது விலக்கு போலீசார் மேற்கொண்ட ரோந்தில் ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் மது விற்றதாக மணிவேல்(40), பெரியவலசு பகுதியில் சுப்பிரமணி மனைவி அனுசியா (48), பவானி பகுதியில் வெள்ளியங்கிரி (52) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.