பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய லாரி
- டிப்பர் லாரி பாரம் தாங்காமல் ஒரு புறமாக குழியில் இறங்கியது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
டி.என்.பாளையம், அக். 26-
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து பங்களாப்புதூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு பங்களாப்புதூர் மூன்று ரோடு பஸ் நிறுத்தம் வந்துள்ளது.
அப்போது பங்களாப்புதூர்-கோபி சாலையில் ஏற்கனவே பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழியை புதிதாக மண்ணை கொட்டி மூடி சமன்படுத்தி உள்ளனர்.
இந்த சமன்படுத்திய இடத்திற்கு வந்த டிப்பர் லாரி, புதிதாக மண் கொட்டியதால் பாரம் தாங்காமல் ஒரு புறமாக குழியில் இறங்கியது.
இதனையடுத்து குழியில் இறங்கிய டிப்பர் லாரியை க்ரைன் கொண்டு வந்து தூக்கி அப்புறப் படுத்தியதையடுத்த மீண்டும் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் மண்ணை கொட்டி சீர்படுத்தினர்.
இதனால் அத்தாணி-சத்தியமங்கலம் மற்றும் கோபி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை சீர்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரியான எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் இதுபோன்ற நிகழ்வு நடக்காது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.