வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஈரோடு இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
- வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் கோர்ட்டில் ஆஜராகமல் இருந்து வந்தார்.
- இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள சுண்டப் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 84). விவசாயி. இவருக்கும் அவரது மகன்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது வந்தது. இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ந் தேதி பழனிசாமி வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இதில் அவரது பேரன் உள்பட சிலர் சொத்துக்காக பழனி சாமியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது 17 வயது பேரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது.
இந்த வழக்கின் விசார ணை அதிகாரியாக அப்போதைய கோபிசெட்டி பாளையம் போலீஸ் இன்ஸ் இன்ஸ்பெக்டர் சோம சுந்தரம் இருந்து வந்தார். சோமசுந்தரம் தற்போது ஈரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு சோம சுந்தரம் கோர்ட்டில் ஆஜரா கமல் இருந்து வந்தார். இதையடுத்து நேற்று மீண்டும் இது குறித்து வழக்கு விசாரணை கோபி செட்டிபாளையம் கோர்ட்டில் நடந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆஜராகமல் இருந்தார்.
இதையடுத்து நீதிபதி தயாநிதி, இன்ஸ்பெக்டர் சோமசுந்ரம் கோர்ட்டில் ஆஜராக பிடிவாரண்டு பிறப்பித்தார்.