உள்ளூர் செய்திகள்

ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் தங்கும் 30 பேரின் கைரேகைகள் பதிவு

Published On 2022-10-14 10:04 GMT   |   Update On 2022-10-14 10:04 GMT
  • ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
  • போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களின் விவர ங்களை சேகரித்ததோடு அவர்களின் கை ரேகைகளும் சேகரிக்கப்பட்டன.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தின் நுழைவு பகுதி மற்றும் நடைமேடை பகுதியில் இரவில் படுத்து தூங்கும் சிலர் சிறுசிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வயதான சிலர் பயணிகளிடம் யாசகம் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்கின்றனர். வயது முதிர்ச்சியால் இறந்து விடும் பட்சத்தில் இறந்த நபர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர் களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவர ங்களை சேகரித்ததோடு, அவர்களின் கை ரேகை களும் சேகரிக்கப்பட்டன.

Tags:    

Similar News