உள்ளூர் செய்திகள்

பஸ் இயக்கப்படாதால் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி

Published On 2022-10-18 09:56 GMT   |   Update On 2022-10-18 09:56 GMT
  • தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்படாததால் பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.
  • தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையம் வந்தனர்.

தாளவாடி:

தாளவாடி அடுத்த தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், முதியனூர், தொட்டாபுரம், சிக்கள்ளி, இக்களூர் போன்ற மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 150-க்கும் மேற்ப ட்டோர் தாளவாடியில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் அரசு பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம்.காலையில் 7 மணிக்கும், 8.30 மணிக்கும் இயக்க ப்படும் பஸ் மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். பின்னர் மாலையில் 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் மூலம் தங்கள் கிராமத்துக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் வழக்கம் போல தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்துக்கு இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்ப டாததால் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் நிலையத்திலேயே 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்துக் கிடந்தனர்.

இந்நிலையில் தங்கள் குழந்தைகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு தாளவாடி பேருந்து நிலையம் வந்தனர்.

பின்னர் விசாரித்த போது பஸ் இயக்கப்படாதது தெரிய வந்தது. இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்டபோது பொது மக்களுக்கு சரிவர பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல் 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் 7 மணி அளவில் தாளவாடியில் இருந்து கோடிபுரம் கிராமத்திற்கு இயக்கப்பட்டது.

இது பற்றி பள்ளி மாணவ, மாணவிகள் கூறும்போது,

நாங்கள் மலை கிராமத்தில் இருந்து இங்கு வந்து படித்து செல்கிறோம். காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வந்தால் மாலை 7 மணி அல்லது 8 மணிக்கு தான் வீட்டிற்கு செல்ல முடிகிறது. வீட்டுக்கு சென்று படிக்கக்கூட முடிவதில்லை. கடந்த சில நாட்களாக 6 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் சரிவர இயக்கப்ப டுவதில்லை. இதனால் நாங்கள் வீட்டிற்கு செல்ல இரவு 9 மணி வரை ஆகிறது.

அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் தங்கள் வீடுகளுக்கு செல்ல அச்சமாக உள்ளதாகவும் தற்போது மழை காலம் என்பதாலும் அச்சத்துடனே பள்ளிக்கு சென்று வருதாகவும் மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியான நேரத்துக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

Tags:    

Similar News