உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா

Published On 2022-10-22 09:44 GMT   |   Update On 2022-10-22 09:44 GMT
  • சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
  • விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சென்னிமலை:

கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான சென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.

இதையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் 34-ம் ஆண்டு கந்தசஷ்டி விழா வரும் 26-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. விழாவை யொட்டி வரும் 26-ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து சுப்பி ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலு க்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

இதை தொடர்ந்து மலை கோவிலில் காலை 9.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. தொடர்ந்து 6 நாட்களுக்கு காலை 10 மணிக்கு யாக பூஜைகள், மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவருக்கு அபி ேஷகமும் மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை நடக்கி றது.

விழாவையொட்டி தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 30-ந் தேதி மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராய் மலை கோவிலில் இருந்து அடிவாரத்தில் அருள் பாலிக்கிறார்.

மேலும் இரவு 8 மணிக்கு சென்னிமலை 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 31-ந் தேதி காலை சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

எனவே கந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்டு காப்பு கட்டி, சஷ்டி விரதம் இருக்க விரும்புவர்கள் 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு வர வேண்டும். அப்போது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராம நாதசிவாச்சாரியார் விரதம் இருப்பவர்களுக்கு காப்பு அணிவிப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News