உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
- சென்னிமலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
- குழந்தைகள் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
சென்னிமலை:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் கை, கால் இயக்க குறைபாடு, மன நல குறைபாடு, காது, மூக்கு, தொண்டை மற்றும் பார்வை குறைபாடு உடைய பிறந்த குழந்தை 18 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள், இலவச அறுவை சிகிச்சை போன்ற வற்றுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
மேலும் இம்மருத்துவ முகாமில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சென்னிமலை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கோபிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.