உள்ளூர் செய்திகள்
- 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
- போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
சென்னிமலை
சென்னிமலை டவுன் பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரியா ரோந்து சென்று கண்காணித்து வந்தார்.
அப்போது சந்தைப்பேட்டையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் 30 மது பாட்டில்கள் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் சென்னிமலை டவுன் பகுதி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்த நாகராஜ் (58) என்பதும் கூலி வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக அந்த பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.