சாக்கடை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட் பட்ட கடத்தூர் ஊராட்சி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் 2 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு பொது மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லை என கூறப்படு கிறது. இங்கு சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் பல முறை பொதுமக்கள் மனு கொடு த்தனர். ஆனால் சாக்கடை வசதி செய்து தரப்பட வில்லை என பொதுமக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் சாக்கடை வசதி செய்து தர வலியுறுத்தி பள்ளிக்கூட பிரிவு பகுதி யில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் கிடை த்ததும் கடத்தூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளி த்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இன்று காலை பர பரப்பான நிலை நிலவியது.