உள்ளூர் செய்திகள்

கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

Published On 2022-06-30 10:07 GMT   |   Update On 2022-06-30 10:07 GMT
  • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
  • கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.

இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,

தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News