உள்ளூர் செய்திகள்

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

Published On 2023-06-12 07:57 GMT   |   Update On 2023-06-12 07:57 GMT
  • புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.
  • மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது.

ஈரோடு,

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விட ப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடு வதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்து 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்க ப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறைய வில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்த தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையா மல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வி யாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்க ப்பட்டது.

அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்க ளுக்கு நாளை மறுநாளும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி திறப்பையொட்டி கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. விடு முறைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஈரோட்டுக்கு திரும்பி வந்தனர்.

இதேப்போல் முக்கிய கடை வீதிகளில் பொது மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நோட்டு, புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்றவை விற்பனை செய்யப்படும் கடைகளில் கூட்டம் அதி கமாக இருந்தது. அதேநேரம் பள்ளி திறப்பையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளி களில் தூய்மை பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வந்தன. பள்ளி வளாகம், வகு ப்பறைகள் தூய்மை ப்படுத்தப்பட்டன. பள்ளி திறப்பத ற்காக அனைத்து ஏற்பாடு களும் தயார் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக காலையிலேயே மாண வர்கள் குளித்து பள்ளி சீருடை அணிந்து பெற்றோர்களுடன் உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பினர்.

மாணவிகளை வரவேற்கும் விதமாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்கு புதிதாக வந்த மாணவி களுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

இதே போல் இன்னும் சில பள்ளிகளில் வாைழ தோரணங்கள் கட்டப்பட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்களுக்கு ரோஜா பூ மற்றும் சாக்லேட் வழங்க ப்பட்டது. பள்ளி திறக்கும் நாளிலேயே மாண வர்களுக்கு பாட புத்தகம், நோட்டுகள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தன.

அதன்படி இன்று மாண வர்களுக்கு நோட்டு, பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளும் உற்சாக த்துடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர். புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாண வர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படு கின்றன.

Tags:    

Similar News