உள்ளூர் செய்திகள்

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியேற வந்த மக்களால் பரபரப்பு

Published On 2022-08-09 09:23 GMT   |   Update On 2022-08-09 09:23 GMT
  • பெரியகொடிவேரி அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.
  • பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

டி.என்.பாளையம்:

பெரியகொடிவேரி கிராமம் சென்றாயன்பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய்த்துறையினருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலம் 40 ஏக்கர் உள்ளது.

இந்த நிலத்தில் பெரிய கொடிவேரி கிராமங்களை சேர்ந்த நிலம் இல்லாத 508 நபர்களுக்கு வருவாய்த்துறையினர் சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கே.என்.பாளையம், நரசாபுரம், நாலிட்டேரி பகுதியை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில், குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய வந்ததாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கூடியிருந்த மக்களிடம் வருவாய் துறையில் முறையாக விண்ணப்பம் அளித்தால் மட்டுமே, தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

ஏற்கனவே பட்டா வழங்கிய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டாம் என கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் கூடியிருந்த மக்களை கேட்டு கொண்டதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News