உள்ளூர் செய்திகள்

கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2022-11-12 09:53 GMT   |   Update On 2022-11-12 09:53 GMT
  • பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடு ப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

மேலும் விடுமுறை மற்றும் விேசஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சுமார் 5 ஆயிரம் கன அடியாக அதி கரித்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் அதிகரித்து 105 அடியை எட்டும் நிலை யில் உள்ளது.

இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக் கெடுத்து செல்கிறது.

இதே போல் கொடிவேரி தடுப்பணையிலும் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதி களவு செல்கிறது.

இந்த நிலையில் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பாது காப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணை முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் உள்ளது.

இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தடுப்ப ணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News