பொதுமக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதி தரும் தன்னார்வலர்கள்
- எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
- அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.
கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.
அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.
இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.