உள்ளூர் செய்திகள்

அத்தப்பூ கோலமிட்டு நடனமாடிய பெண்கள்

Published On 2022-09-08 09:18 GMT   |   Update On 2022-09-08 09:18 GMT
  • ஈரோட்டில் இருக்கும் கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.
  • பெண்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

ஈரோடு:

ஓணம் பண்டிகை இன்று கேரளா மக்களால் உற்சா கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மகாபலி மன்னரை வரவேற்பு முகமாக கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான கேரளா வாழ் மக்கள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். பெரும்பாலான கேரளா மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளா சென்று விட்ட நிலையில் ஈரோட்டில் இருக்கும் கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடினர்.

ஈரோடு செட்டிபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான கேரளா மக்கள் வசித்து வருகின்றனர். இன்று ஓணம் பண்டிகை முன்னி ட்டு அதிகாலை யிலேயே எழுந்து குளித்து பாரம்பரிய உடைகள் அணிந்து ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.

பெண்கள் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

பின்னர் தங்களது பாரம்பரிய நடனமாடி அசத்தினர். இதனால் அந்த பகுதியே விழா கோலம் கொண்டது. இதைத் தொடர்ந்து பல வகையாக உணவுகள் சமைத்து பரிமாறப்பட்டன.

Tags:    

Similar News