உள்ளூர் செய்திகள்

ரெயில்வே பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-14 07:37 GMT   |   Update On 2022-06-14 07:37 GMT
  • ரெயில்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன.

ஈரோடு:

கோவை-ஷீரடி விரைவு ரெயிலை தனியாருக்கு விடுவதை உடனடியாக கைவிட வேண்டும். நாடு முழுவதும் விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ராமாயண யாத்திரை என்ற பெயரில் டெல்லி-நேபால் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி-க்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும். பாரத் கவுரவ் என்ற பெயரில் சுற்றுலா ரெயில்கள் என்ற பெயரில் 100 விரைவு ரெயில்களை தனியாருக்கு விற்கும் முடிவை உடனே கைவிட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஈரோடு கிளை சார்பில் இன்று கறுப்பு தினமாக கடைபிடித்து ஈரோடு ரெயில்வே பணிமனையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வினோத்குமார், செயலாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிர்வாகிகள் முனிச்சந்த் மீனா, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தனியார் மயமாக்கலை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News