உள்ளூர் செய்திகள்

ஈரோடு ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகள் விற்பனை விறுவிறுப்பு

Published On 2022-06-14 07:20 GMT   |   Update On 2022-06-14 07:20 GMT
  • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
  • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு:

ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News