உள்ளூர் செய்திகள்

மின்கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்யக்கோரி த.மா.கா. மனு

Published On 2023-06-12 08:25 GMT   |   Update On 2023-06-12 08:25 GMT
  • வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

ஈரோடு, 

தமிழகத்தில் சமீபத்தில் சிறு,குறு தொழில் நிறு வனங்களுக்கு மின் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் எம்.பி. அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி இன்று ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் விடி யல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் வைப்பு தொகை 3 மடங்கு உயர்வு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சில ஆண்டு கால மாகவே கொரோனா தொற்று, மழை,டெங்கு போன்ற பல்வேறு சிர மங்களில் உள்ள மக்களை தமிழக அரசு மென்மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது.

ஆகவே அரசு பொது மக்கள் மீது சுமத்தியுள்ள சுமைகளை மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி.சந்திரசேகர், மாநில துணைத் தலைவர் ஆறு முகம், தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம், கதிர்வேலு, ரபீக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News