தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் அறிவுரை
- தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
ஜூன்.30-
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்- அமைச்சரின் நான் முதல்வன் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற தலைப்பினை மைய கருத்தாக கொண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்பிற்கு செல்ல உள்ள மாணவ, மாணவி யர்களாகிய நீங்கள் உங்களு டைய தனித்திறமையை புரிந்து கொண்டு அதற்கேற்ற கல்வியினை பயின்றும் உங்களது உள்ளத் தில் புகைந்திருக்ககூடிய எண்ணங்களை வெளிப்ப டுத்தி அவற்றில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி உலகளவில் சாதிக்க முன்வர வேண்டும்.
மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் கல்வி பயில ேவண்டுமென்ற எண்ணத்தை மாற்றி, அரசுப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவ, மாணவியர்கள் உங்களுடைய உள்ள தாழ்வு மனப்பான்மையினை மாற்றி எங்களாலும் நல்ல சூழ்நிலையில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற முடியும் என்ற இலட்சிய நோக்கத்து டனும், எளிதாக என்னாலும் கல்வி பயில முடியும் என்ற நம்பிக்கை யுடன் மேற்படிப்பை தொடர வேண்டும்.
கல்வி என்பது மிக சக்தி வாய்ந்த ஆயுதம். எதிர்காலத் தில் நான் இந்த துறையில் தான் பணியாற்ற வேண்டு மென்ற எண்ணம் மாணவ, மாணவியர்களாகிய அனை வரிடமும் இருப்பது இயல்பு. அந்த எண்ணம் நிறைவேறா விடினும் நீங்கள் அனை வரும் மனம் தளராமல் விடா முயற்சியுடனும், தன் னம்பிக்கையுடனும் உங்கள் வாழ்வினை எதிர்கொண்டு ஏற்றம் பெற வேண்டும்.
மாணவ, மாணவியர்களா கிய நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காக வும் கல்வி பயில முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த்மோகன், பத்மநாப புரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.