உள்ளூர் செய்திகள்

மாந்தோப்பு சொசைட்டி காலனியில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளதால் கார் விபத்துக்குள்ளாகி இருப்பதை படத்தில் காணலாம். 

உடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்காததால் தொடரும் விபத்து

Published On 2023-07-06 09:13 GMT   |   Update On 2023-07-06 09:13 GMT
  • மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது.
  • பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்டது இலக்கியம்பட்டி பஞ்சாயத்து.

இது தமிழகத்தில் 15 வார்டுகள் உடைய மிகப்பெரிய பஞ்சாயத்தா கவும், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய அரசு தலைமை அலுவலகங்கள் இயங்கி வரும் பஞ்சாய த்தாகவும் உள்ளது.

இந்த நிலையில் மக்களின் அடிப்படைத் தேவைகளான கழிவுநீர் கால்வாய் தூர்வாரி புதுப்பித்தல், தெருவிளக்கு, குடிநீர், உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்யாமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மாந்தோப்பு சொசைட்டி காலனி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் சிதலமடைந்து உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது.

மேலும் மாந்தோப்பு, காளியப்ப செட்டி காலனி, நெல்லி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 1000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிக்கும் மக்கள் இச்சாலையை முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதிகளுக்கு செல்ல பிடமனேரி ஏரிக்கரை முக்கிய சாலையில் இருந்து சொசைட்டி காலனி வழியாக தான் செல்ல வேண்டும்.

சொசைட்டி காலனி உள் நுழையும் பிரிவு சாலையில் 40 அடி அகலத்திற்கு கழிவுநீர் கால்வாய், சிறிய கல்வெட்டு உள்ளது.

இந்த கல்வெட்டின் அடியில் செல்லும் கழிவு நீர் கால்வாய் பல வருடங்களாக தூர்வாரப்படாததால் கால்வாய் அடைத்து கழிவு நீர் ரோட்டில் சென்றது.

இது சம்பந்தமாக பொது மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து ஒரு மாதத்திற்கு பின் பஞ்சாயத்து நிர்வாகம் கல்வெட்டை உடைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தது.

பின்னர் பல மாதங்கள் ஆகியும் உடைத்த கல்வெட்டை சீர் செய்யாமல் இருப்பதால் அவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் முதியோர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள் உள்ள பகுதி என்பதால் கார், இருசக்கர வாகனம் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

கட்டுமான பணிக்காக வரும் கனரக வாகனங்கள் திரும்ப வழியின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து கல்வெட்டு பள்ளத்தில் கார் இருசக்கர வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறது.

பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கல்வெட்டை புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News