மரக்காணம் பகுதியில் மர்மநோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பால் விவசாயிகள் கவலை
- விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
- அதிகப்படியான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
விழுப்புரம்:
மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கந்தாடு ஊராட்சி இப்பகுதியில் உள்ள காணி மேடு கந்தன் பாளையம் மண்டகப்பட்டு குரும்பூரம் முதலியார் பேட்டை ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
அப்பகுதியில் அதிகப்படியான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது விவசாயம் பாதிக்க ப்பட்டால் கால்நடை கள் வளர்ப்ப தின் மூலம் கிடைக்கும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதுபோல் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உள்ளது.
இதன் காரணமாக தந்தாடு ஊராட்சியில் உள்ள காணி மேடு மண்டகப்பட்டு குறும்புறம் உள்ளிட்ட கிராமங்களில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகள் மர்ம நோயால் பாதிக்க ப்பட்டுள்ளது. இதுபோல் பாதி ப்பட்டுள்ள கா ல்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதிய கால்நடை மருத்துவர்களும் இங்கு இல்லை. இதனால் மர்ம நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகிறது. இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மண்டகப்பட்டு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் கால்ந டைகளுக்கும் சிகிச்சை அளி க்க மா வட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.