உள்ளூர் செய்திகள் (District)

வரப்பில் உளுந்து திட்டத்தில் விவசாயி ஒருவர் விதை நடவு செய்த காட்சி.

செங்கோட்டை வட்டாரத்தில் புதிய திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன்பெறலாம் -வேளாண்மை அதிகாரிகள் தகவல்

Published On 2022-11-30 08:22 GMT   |   Update On 2022-11-30 08:22 GMT
  • செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் வரப்பில் உளுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • வேளாண்மை உழவர் நலத்துறை 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்குகிறது.

செங்கோட்டை:

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பில் செங்கோட்டை வட்டாரத்தில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் வரப்பு பயிராக உளுந்து சாகுபடியை விவசாயிகளிடம் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் உத்தரவின் பேரில் வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் படி செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் குண்டாறு அணைக்கு செல்லும் பகுதியில் மோட்டை அணைக்கட்டு பகுதிகளில் வரப்பில் உளுந்துதிட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை தற்போது வரப்பில் உளுந்து என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேர் நெல் பரப்பில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதற்கு 3 கிலோ விதையினை ரூ. 150 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சி அழிக்கப்படுகிறது. மண்வளம் பெருகுகிறது. கூடுதலாக ஒரு பயறு வருவாய் கிடைக்கின்றது. எனவே செங்கோட்டை வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் கேட்டுக்கொண்டார். செயல் விளக்கத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News