விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தகவல்
- மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
- 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரபி குறுவை கால தோட்டப்பயிரான மரவள்ளி, வெங்காயம், கத்திரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இதற்காக அறிவிக்கை செய்யப்பட்ட சின்னசேலம், நயினார்பாளையம், இந்திலி, வடக்கநந்தல், ஆலத்தூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், நாகலூர், அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, சங்கரா புரம், சேராப்பட்டு, திருக்கோவிலூர், திருப்பா லப்பந்தல், ஆவிகொளப் பாக்கம், எறையூர், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திரு நாவலூர், எலவனாசூர் கோட்டை, வெள்ளிமலை, களமருதூர், மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
மேலும், தலா ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ.909.17 மற்றும் கத்திரி ரூ.817.51 தொகையை வரும் ஜனவரி மாதம் 31- ந் தேதிக்குள்ளும், மரவள்ளி ரூ.1,517.51 தொகையை வரும் பிப்ரவரி மாதம் 29- ந் தேதிக்குள்ளும் செலுத்தி விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எதிர்பா ராத திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது வழக்கத்தை விட 50 சதவீதம் பயிரின் மகசூல் குறைந்தி ருந்தால் காப்பீடு தொகை வழங்கப்படும். அறுவடை முடிந்த பின் 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அடங்கல், இ-அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.