நிலங்களில் காட்டெருமை புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்
- 100 ஏக்கர் நிலங்களின் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்றிட வேண்டும்,
- 300 மீட்டர் தூரம் மரங்கள் அகற்றப்படாததால் சாலை அமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், பாப்பி ரெட்டிப்பட்டி தனியார் தொழிற்சாலையில் ஆற்றில் திருட்டுத்தனமாக நீர் எடுத்தது சம்பந்தமாக மனு கொடுத்தும் , சுமார் 40 கோடி ரூபாய் வரை அரசு இழப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தும் ஆடை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்கள்.
தொடர்ந்து அப்பகுதியில் 100 ஏக்கர் நிலங்களின் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதை அகற்றிட வேண்டும்,
வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் காட்டெ ருமை புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து இவ்வாண்டில் இதுவரை நடந்த விவசாயிகள் கூட்டத்தில் 291 மனுக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்பப்பட்டு அதில் பெரும்பாலானவை அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பப்ப ட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
வள்ளி மதுரை அணைக்கட்டு கட்ட நிலம் கொடுத்தவர்களின் நிலங்கள் 10 வருடங்களாகியும் சப்-டிவிஷன் செய்து தரப்படாமல் உள்ளதால், அப்பகுதி விவசாயிகளுக்கு அரசு நல திட்டங்களான பிரதமரின் உதவி தொகை மற்றும் மானியங்கள் பெறுவதில் சிரமம் உள்ளதாக விவசாயிகள் கூறியதற்கு கோட்டாட்சியர், உடனடியாக நிலம் கொடுத்தவர்களின் பழைய பைல்களை தேடி எடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு சப்-டிவிஷன் செய்து தர ஏற்பாடு செய்து அறிவுறு த்தினார்.
நரிப்பள்ளி பகுதியில் கூட்டுறவு வங்கி மூலமாக ஏற்கனவே டிராக்டர், ரொட்டோவெட்டர், கலப்பைகள் உள்ள நிலையில் அவைகள்பயனற்று சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் மேலும் புதியதாக இயந்திரங்கள் வந்துள்ளது என்று மேலும் அங்கு கடன்உள்ளிட்ட விவசாயிகளின் மனுக்கள் 2 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்ப டாமல் உள்ளதாக குற்ற ச்சாட்டினர்.
அதற்கு கூட்டுறவு அதிகாரிகள் கூகையில், நரிப்பள்ளி கூட்டுறவு வங்கி 9 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவந்த புகாரின் பேரில் ஊழியர்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு ள்ளனர்.
இதனால் ஆட்கள் குறைபாடு ஏற்பட்டு கூட்டுறவு வங்கியில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இதற்கு கோட்டாட்சியர் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களிலிருந்து அலுவலர்களை பய ன்படுத்தி விவசாயிகளின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
அரூர்-சித்தேரி சாலையில் சுமார் 300 மீட்டர் தூரம் மரங்கள் அகற்றப்படாததால் சாலை அமைப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை உடனடியாக அகற்ற விவசாயிகள் வலியுறுத்திய போது, அதற்கு வனத்துறை சார்பில் 48 புளிய மரங்கள், 4 புங்கன் மரங்கள் இன்னும் 5 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வரட்டாறு, வாணியாறு கால்வாய்களை சீரமைத்திட 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்.
அதே போன்று ஏரிகளின் அருகில் உள்ள கரை பகுதிகளை தூய்மை ப்படுத்தும் பணிகளும் இவர்களை பயன்படுத்த அனுமதி வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பெருமாள் (அரூர்), சுப்பிரமணி (பாப்பிரெட்டிப்பட்டி), கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இளஞ்செ ழியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.