உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டார விவசாயிகள் பி.எம் கிசான் திட்ட நிதியினை தொடர்ந்து பெற ஆலோசனை

Published On 2022-08-11 06:01 GMT   |   Update On 2022-08-11 06:01 GMT
  • மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி யில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பரமத்தி வேலூர்:

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற வேண்டிய பரமத்தி வட்டார விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, செல்போனுக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் தொடந்து வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News