ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை
- 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
- ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ், பணம் செலுத்திய 130 விவசாயி களுக்கு 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்ப டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களுக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு அரசு வழங்கிய ஆணையுடன் நேரில் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவித்த விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியும், கடந்த ஒரு ஆண்டுகளாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அதிகாரிகள், உத்தரவு வரவில்லை என கூறி வருகின்றனர்.
உடனடியாக எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். மாடுகளுக்கு கூட குடிதண்ணீர் இல்லா மல் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.