உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் மனு கொடுக்க வந்த கணவரை இழந்த பெண்ணை படத்தில் காணலாம்.

மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்- 3 குழந்தைகளுடன் கலெக்டரிடம் கண்ணீர் மனு

Published On 2022-06-14 05:01 GMT   |   Update On 2022-06-14 05:01 GMT
  • எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
  • என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டினார்.

கடலூர்:

கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.

இது சம்மந்தமாக கடந்த 08.04.2022 காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும்,அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.

எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டுமிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News