உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Published On 2023-03-10 08:54 GMT   |   Update On 2023-03-10 08:54 GMT
  • சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார்.
  • மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

விழுப்புரம்:

விழுப்புரம் பாணாம்பட்டு பகுதி நடராஜன் மனைவி மணிமேகலை (வயது 39). பெண் போலீஸ். இவரும் நடராஜனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நடராஜன் தனியாரில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. பெண் போலீஸ் மணிமேகலை சென்னை வேப்பரி கமிஷனர் அலுவலகத்தில் பணியில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதல் கணவன் மனைவியிடையே பிரச்சனை இருந்தது. அதனால் நடராஜன் குழந்தைகளை அவருடன் அழைத்து கொண்டு வந்து விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

கணவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென எண்ணிய மணிமேகலை அலுவலகத்தில் பணிமாறுதல் கோரியதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் துறைக்கு மாற்றப்பட்டார். நேற்று மாலை வீட்டிற்க்கு சென்ற மணிமேகலை, தன்னுடைய உறவினர் திருமணத்திற்க்கு வருமாறு நடராஜனை அழைத்துள்ளார். இதில் இவ்விருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த பெண் போலீஸ் மணிமேகலை இரவு 2 மணிக்கு மேல் வீட்டிலிருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு முழித்த நடராஜன், மணிமேகலையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இவருக்கு 90 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் பெண் போலீஸ் மேல்சிகி ச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News