திடீரென விழா நிறுத்தம்: மாடுவிடும் விழாவில் காளை வேடமணிந்த வாலிபரை ஓடவிட்ட ரசிகர்கள்
- சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
- ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.
இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரம் என 40 பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் எருது விடும் விழாவில் சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.
மேலும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்டனர்.