உள்ளூர் செய்திகள்

மகா காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

Published On 2023-05-04 08:26 GMT   |   Update On 2023-05-04 08:26 GMT
  • செந்தில் நகரில் மகா காளியம்மன் கோவில் திருத்தேர் பெருவிழா நடைபெற்று வருகிறது.
  • அக்னி குண்டம் இறங்கிய பின் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தது.

தருமபுரி,

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி எல்லாத்தையும் பட்டி பஞ்சாயத்து செந்தில் நகரில் ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் 123-வது ஆண்டு திருத்தேர் பெருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று காலை காளியம்மன், மாரியம்மன் சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக குண்டம் இறங்குதல் நிகழ்வானது நடைபெற்றது. இரவு நடைபெற்ற இந்த நிகழ்வில் தலைமை கோவில் பூசாரி முதலவதாக பூமிதித்து நிகழ்வை தொடங்கி வைத்தார். அதன் பின் ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.

அக்னி குண்டம் இறங்கிய பின் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தது. சாமி வரும் பொழுது பக்தர்கள் குழந்தைகள் பாக்கியம் வேண்டியும், திருமணம் நடைபெற வேண்டி தரையில் படுத்துக்கொண்டனர். இவர்களை சாமி தாண்டி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் நீண்ட தூரம் படுத்து கொண்டனர் இவர்களை சாமி தாண்டி சென்று கோயிலை அடைந்தது . கோயிலில் உள்ள ஊஞ்சலில் சாமியை வைத்து தாலாட்டு பாடும் உற்சவம் நடைபெற்றது. வருகிற 5-ந் தேதி மகா காளியம்மன் தேர் திருவிழா நடைபெறுகிறது.

விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags:    

Similar News