உள்ளூர் செய்திகள்

ஏரியில் உலாவி கொண்டிருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்: சங்கராபுரம் காட்டில் விட்டனர்

Published On 2023-10-28 07:39 GMT   |   Update On 2023-10-28 07:39 GMT
  • விடுமுறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம்.
  • இதையடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோட்டில் பெரிய ஏரி உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. விடு முறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் கையில் தூண்டி லுடன் மீன் பிடிக்க பெரிய ஏரிக்கு சென்றனர். ஏரியின் கரையின் மீது நடந்து சென்ற போது, பாம்பு மூச்சுவிடும் சத்தம் கேட்டுள்ளது. இதை யடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர். அங்கு அதிக தடிமன் கொண்ட நீளமான பாம்பு ஒன்று படுத்துக் கிடந்த தை பார்த்து பயத்தில் வீடு திரும்பினர். அங்கிருந்த வர்களிடம் நடந்த சம்பவத் தை சிறுவர்கள் கூறினர். இதையடுத்து ஏரிக்கரைக்கு சென்ற பொதுமக்கள், அங்கிருப்பது மலைப் பாம்பு என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் பகண்டை கூட்ரோடு பெரிய ஏரிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். புதருக்கு அருகில் ஏரியில் கரையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உலாவிக் கொண்டிருந்தது. அதனை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதனை எடுத்துச் சென்று சங்கராபும் வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News