காசிமேட்டில் மீன் விலை தொடர்ந்து அதிகரிப்பு
- டீசல் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றன.
- மீன்விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அசைவ பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள்.
ராயபுரம்:
காசிமேட்டில் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகும் கடந்த சில வாரங்களாக மீன்களின் விலை அதிகமாகவே காணப்படுகிறது.
பெரியவிசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் குறைந்த எண்ணிக்கையில் செல்வதால் மீன்வரத்து குறைந்து உள்ளது. வஞ்சிரம், வவ்வால், பாறை, களவான் மயில் கோலா உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை அதிகமாக காணப்பட்டது.
வஞ்சிரம் கிலோ ரூ.1300-க்கும், வவ்வால்-ரூ.1000 வரையும் விற்கப்பட்டது. மீன்விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அசைவ பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். இதனால் காசிமேடு பகுதியில் வழக்க மான உற்சாகத்துடன் மீன் விற்பனை களை கட்டி உள்ளது.
இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, மீன்விலை அதிகமாக உள்ளது. கடுமையான டீசல் விலையேற்றத்தின் காரணமாக குறைந்த அளவு எண்ணிக்கையிலான விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றன.
இதனால் குறைந்த அளவு மீன் வரத்து இருப்பதால் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதே நிலைதான் வரும் நாட்களிலும் நீடிக்கும் என்றார்.
காசிமேடு மார்க்கெட்டில் மீன் விலை(கிலோவில்) வருமாறு:-
வஞ்சிரம்-ரூ.1300
கொடுவா-ரூ. 800
வவ்வால்-ரூ.1000
தேங்காய் பாறை-ரூ.800
மயில் கோலா-ரூ.350
சங்கரா-ரூ.500
பர்லா-ரூ.400
கடம்மா-ரூ.400
நெத்திலி-ரூ. 300
இறால், நண்டு-ரூ.350 முதல் ரூ.500 வரை.