மீன்பிடி குத்தகையை தனியாருக்கு விடும் அரசின் முடிவை கண்டித்து வைகை அணையில் மீனவர்கள் போராட்டம்
- வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
- அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே வைகை அணை நீர் தேக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை மூலம் மீன் குஞ்சுகள் லட்ச க்கணக்கில் விடப்படுகிறது.
மீன் குஞ்சுகள் வளர்ந்த பின் பதிவு பெற்ற மீனவ சங்க உறுப்பினர்கள் மீன்கள் பிடிக்கின்றனர். அைவ மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பதிவு பெற்ற 115 பரிசல்கள் மூலம் 230 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இதன்மூலம் மட்டுமே அவர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.
இந்நிலையில் வைகை அணையில் மீன் பிடிக்கும் குத்தகையை தனியா ருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
மீன்பிடி குத்தகையை தனியாருக்கு விடுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். மேலும் மீன் பிடி குத்தகையை தனியாருக்கு விடும் பட்சத்தில் வைகை அணை நீர் தேக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தியும் மீனவர்கள் வைகை அணை மீன்வள த்துறை அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் கலையரசி யிடம் மீனவர்கள் மனு கொடுத்தனர்.