உள்ளூர் செய்திகள்

கொடிமரம் நடுவிழா நடைபெற்றது.

ஜாம்புவானோடை தர்காவில் கந்தூரி விழாவுக்கான கொடிமரம் நடுவிழா

Published On 2022-11-13 09:02 GMT   |   Update On 2022-11-13 09:02 GMT
  • அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா.
  • நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது.

புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது. தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர். இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது.

மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News