குமாரபாளையத்தில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
- குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
- தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
குமாரபாளையம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் படிக்கட்டுக்கு மேலே தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
அதனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது.இது குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது காவிரியில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்ல வேண்டி கூறி வருகிறோம்.
மேலும் தங்குவதற்கு தேவையான இடங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். நாங்களும், நகராட்சி பணியாளர்களும் தீவிர கரையோர ரோந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.