கிருஷ்ணா கல்லூரியில் உணவுத் திருவிழா
- கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
- 1000-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து காட்சிப்படுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனபள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி யின் தலைவர் முன்னாள் எம்.பி. பெருமாள்,தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தனர்.
பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்,கலைக்கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனை வரையும் வரவேற்றார். தாஜ் ஹோட்டல்களின் முன்னாள் சமையல் நிபுணர் கிருஷ்ணகிரியை சார்ந்த பேராசிரியர் மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். "ஆரோக்கிய வாழ்விற்கு நெருப்பில்லா சமையல்" எனும் கருத்தை ஒட்டி மாணவர்கள் சிறுதானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், இயற்கை குளிர்பானங்கள், சத்து மாவு வகைகள் என 1000-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து காட்சிப்படுத்தினர்.
சிறந்த உணவு வகைகள் தேர்வு செய்யப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றி தழ்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.