உள்ளூர் செய்திகள்

ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு செய்த காட்சி.

பாலக்கோடு அருகே ஓட்டல், பேக்கரி, மளிகை கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆய்வு

Published On 2023-09-03 10:29 GMT   |   Update On 2023-09-03 10:29 GMT
  • பாலக்கோடு அருகே நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்கள் , தாபாக்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
  • தரமற்ற உணவுகளை விநியோகம் செய்த ஓட்டல்கள், பேக்கரிகள் என 4 கடைகளுக்கு தலா ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாலக்கோடு:

மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவின் பேரில் தேசிய நெடுஞ்சாலை, ஹைவே, பைபாஸ் சாலைகளில் உள்ள ஓட்டல்கள், தாபாக்கள் மற்றும் உணவகங்கள், சாலை ஓரதுரித உணவகங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால் உள்ளிட்ட குழுவினர் பாலக்கோடு ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் சுகர்மில், மாதம்பட்டி, வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி மகேந்திரமங்கலம் மற்றும் ஜிட்டாண்டஅள்ளி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், சாலை ஓர உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தார்.

ஆய்வில் உணவகங்களில் உரிய சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா, உணவுப் பொருள்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, மூலப் பொருட்கள் உரிய காலாவதி தேதி உள்ளனவா மேலும் சட்னி, தயிர், இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் தரமாகவும், குடிநீர் விநியோகம், பேக்கரி மற்றும் டீக்கடைகளில் தேயிலை தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

சுமார் 25-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தாபாக்கள், பேக்கரிகள் ஆய்வு செய்ததில் 2 உணவகங்களில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 3 லிட்டர், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்கள், 2 உணவகங்களில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு மளிகை கடை மற்றும் பேக்கரியில் இருந்து செயற்கை நிறம் ஏற்றப்பட்ட வறுத்த பச்சை பட்டாணி 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

நியமன அலுவலர் அறிவுறுத்தல்படி 4 கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் வீதம் 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் ஜிட்டான்டஅள்ளியில் ஒரு டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கடைக்காரருக்கு ரூ.5ஆயிரம் உடனடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News