உள்ளூர் செய்திகள்

 அரசு தொழிற்பயிற்சி மையத்தில் அமைச்சர் கணேசன் ஆய்வு செய்த காட்சி.

தொழிற்பயிற்சி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும் அமைச்சர் பேச்சு

Published On 2022-09-06 10:09 GMT   |   Update On 2022-09-06 10:09 GMT
  • அமைச்சர் கணேசன் ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.
  • தொழிற்பயிற்சி படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும்.

சேலம்:

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் சேலத்திற்கு இன்று வந்தார். அவரை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் வரவேற்றனர் தொடர்ந்து அமைச்சர் கணேசன் ஆண்கள் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு உள்ள தொழில் கூடங்களை பார்வையிட்ட அவர் தேவையானவை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தொழிற் பயிற்சிக்கு வளமான எதிர்காலம் உள்ளது.

தொழிற்பயிற்சி படிக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். இதனால் மாணவர்கள் தொழிற்பயிற்சியை சிறப்பாக கற்று அதற்கான வேலை வாய்ப்புகளில் சேர வேண்டும் என்றார். அப்போது அவருடன் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தொழிலாளர் நலத்துறை இயக்குனர் வீரராகவர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News