உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே ரூ. 8.50 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
- அடிக்கல் நாட்டு விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார்.
- நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அலங்கார தளக்கல் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. உடையாம்புளி காமராஜர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ், ஓடை மறிச்சான் ஊராட்சி தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் இசக்கிமுத்து, தி.மு.க. நிர்வாகிகள் சந்தன சுப்பிரமணியன், சந்தனமுத்து, இசக்கிமுத்து, மாசாணம் , முத்துக்குட்டி, அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.