உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தில் சொகுசு காரில் வலம் வந்த மோசடி மன்னன்: ஹெலிகாப்டர் வாங்க திட்டமிட்டது அம்பலம்

Published On 2023-10-17 07:40 GMT   |   Update On 2023-10-17 07:40 GMT
  • கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • நான் உயர் ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வருபவர்களிடம் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார் பாளையத்தை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் ரூ.1 லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தார். இதற்காக தனி அலுவலகம், ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடமிருந்து 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளை பெற்றார். இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பாக தலைமறை வானார். சென்னையில் பதுங்கியிருந்த ஷமீர் அகமதுவை கண்டறிந்த ஏஜெண்டுகள், அவரிடம் லாவகமாக பேசி மூரார்பா ளையத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஓப்ப டைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்க ளிடம் இருந்து முதலீடு களை பெற ஷமீர் அகமது கையாண்ட யுக்திகள் குறித்த தகவல்கள், அவரது ஏஜெண்டுகள் மூலமாக வெளியாகியுள்ளது. பொது மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை கட்டு கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் ஷமீர் அகமது வீடியோ எடுத்துக் கொள்ளார்.

தன்னை நம்பி எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது பாருங்கள் என முதலீடு செய்ய வருபவர்களிடம் காண்பித்துள்ளார். உயர்ரக கார்களான ஆடி, வோல்ஸ் வேகன், பி.எம்.டபள்யு, ஜாகுவார் போன்ற வாகனங்களை வாங்கி அதில் பயணம் செய்வது. இதனை வீடியோ எடுக்கும் ஷமீர் அகமது, நீங்கள் அளிக்கும் பணத்தை சினிமா தொடர்புடையவர்களுக்கு வட்டிக்கு அளிக்கிறேன். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு பாதி தருகிறேன். மீதியை வைத்துதான் நான் உயர்ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வரு பவர்களிடம் கூறியுள்ளார். மேலும், உயர்ரக கார்கள், மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்று வருவதால் முதுகு வலி ஏற்படு வதாகவும், விரைவில் ஹெலி காப்டர் வாங்க உள்ளதாகவும் கூறி யுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த மொத்தபண மான ரூ.70 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். மேலும், விரைவில் நடை பெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடனாக பணம் கேட்பதாகவும், நிறைய முதலீடுகளை பெற வேண்டுமென்று ஏஜெண்டு களிடம் கூறியுள்ளார். இவை யனைத்தையும் நம்பிய பொதுமக்கள் பல கோடி ரூபாயினை ஷமீர் அகமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News